மஇகா இளைஞர் பிரிவின் வர்த்தக பயணம்

இளம் தொழில்முனைவர்களுக்கு வர்த்தக ரீதியில் வழிக்காட்ட மஇகா இளைஞர் பிரிவு ராக்கான் மைக்ரோ எனும் வர்த்தக பயணம் திட்டத்தை நாடு முழுவதும் மேற்கொள்ளவிருப்பதாக தேசிய இளைஞர் பிரிவு தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.

மஇகா, மைக்கி, மித்ரா ஆகிய அமைப்புகளின் முயற்சியில் நாடு முழுமையிலும் 1,000 இளம் தொழில் முனைவர்களை சந்தித்து அவர்களுக்கு வழிக்காட்டும் இந்த திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மஇகா தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ தொடக்க விழா காணவிருக்கிறது என்று அவர் கூறினார்.

40 வயதிற்கு கீழ் உள்ள ஆண் – பெண் இளைஞர்கள், நாடு முழுவதும் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதற்கான திட்டங்களை பெற்று பயனடையுமாறு மைக்கியின் பொதுச் செயலாளர் எ.டி.குமராஜா கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here