99 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி போதைப் பொருள் அழிப்பு

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் 99 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள்களை அழிக்கவிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ சைபுல் அஸ்மி பின் ஹாஜி கமாலுடின் கூறினார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையின் வழி 5,252 வழக்குகளின் வழி கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இதுவாகும்.

 

பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு போதைப்பொருள்களை அழிப்பதற்கு ஏஜியிடம் இருந்து அனுமதி பெற்றதாக டத்தோ சைபுல் தெரிவித்தார்.

அதில் 132.1 கிலோ கென்னபிஸ், 29.9 கிலோ கிராம் ஹெரோயின், 16 கிலோ மெத்தகெத்தமின், 247 லிட்டர்  கெத்தமின் நீர் ஆகிய கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை நெகிரி செம்பிலான் புக்கிட் பிளண்டோ என்ற பகுதியில் அழிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் குவாலிட்டி அலாம் சென்.பெர்ஹாட் நிர்வாகத்தினரிடம் இந்த அனைத்து போதைப் பொருள்களை அழிப்பதற்கான இயந்திரங்கள் இருப்பதாக சைபுல் தெரிவித்தார்.

போதைப் பொருளை அடியோடு ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் போலீசார் மேற்கொண்டு வருவதாக அதே வேளை பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் என்றார்.

போதைப் பொருள் சம்பந்தமாக விவரம் அறிந்தவர்கள் 03-21159999 தொலபேசி வழியாகவோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here