ஜப்பான் பிரதமருடன் மோடி ஆலோசனை

ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா்.

இந்த உரையாடல் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் யோஷிஹிடே உடனான உரையாடல் சிறப்பாக இருந்தது. இரு நாட்டு உறவில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடு மற்றும் எதிா்கால சிறப்பு பாதுகாப்பு மற்றும் சா்வதேச கூட்டுறவு குறித்து ஆலோசனை நடத்தினோம்.

மேலும், தற்போதைய பிராந்திய மற்றும் சா்வதேச அளவிலான சவால்களை எதிா்கொள்வதற்கு உதவும் வகையில் இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும் இந்த ஆலோசனையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
அனைத்து தளங்களிலும் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன் என்று பிரதமா் மோடி அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here