உயர் கல்வி அமைச்சு வழி 140 திட்டங்கள்: 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

பாங்கி: மொத்தம் 140 திட்டங்கள் வழி 20,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் தங்களைத் தாங்களே மேம்படுத்துவதற்கும் உதவும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோரெய்னி அகமது தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் தேசிய பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தின் (பெஞ்சனா) உயர் கல்வி அமைச்சகம்-தொழில் முன்னேற்றத் திட்டத்தின் (கேபிடி-சிஏபி) கீழ் வருகின்றன. இதுவரை 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  இதில் ஈடுபட்டுள்ளதாக நோரைய்னி கூறினார்.

“RM35mil பெஞ்சனா முயற்சியில் இருந்து, KPT-CAP திட்டத்திற்காக மொத்தம் RM100mil ஒதுக்கப்பட்டுள்ளது. கேபிடி-சிஏபி மூன்று திட்டங்களை உள்ளடக்கியது; வேலை பொருத்தம் மற்றும் வேலைவாய்ப்பு, தொடர்ச்சியான தொழில்முனைவோர் திட்டம் மற்றும் கிக் பொருளாதாரம்” என்று அவர் திங்களன்று (செப்டம்பர் 28) யுனிவர்சிட்டி கெபாங்சன் மலேசியாவில் அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், நிதியமைச்சர்  தெங்கு டத்தோ ஶ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ  எம். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here