10.11 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது.உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 38 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 82 ஆயிரத்து 429 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 620 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும்கொரோனாவால் இதுவரை 10.11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 74,06,146
இந்தியா – 61,45,292
பிரேசில் – 47,80,317
ரஷியா – 11,67,805
கொலம்பியா – 8,24,042
பெரு – 8,11,042
ஸ்பெயின் – 7,58,172
அர்ஜெண்டினா – 7,36,609
மெக்சிகோ – 7,33,717
தென் ஆப்பிரிக்கா – 6,72,572

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,10,785
பிரேசில் – 1,43,010
இந்தியா – 96,318
மெக்சிகோ – 76,603
இங்கிலாந்து – 42,072
இத்தாலி – 35,875
பெரு – 32,396
பிரான்ஸ் – 31,893
ஸ்பெயின் – 31,614
ஈரான் – 25,986
கொலம்பியா – 25,828

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா – 51,01,398
அமெரிக்கா – 46,48,335
பிரேசில் – 41,35,088
ரஷியா – 9,52,399
கொலம்பியா – 7,34,154
பெரு – 6,76,925
தென் ஆப்ரிக்கா – 6,06,520

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here