அமெரிக்காவின் 2 பெரிய விமான சேவை நிறுவனங்களின் முடிவால் அதிர்ச்சி

அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 1600 பைலட்கள் உட்பட 32,000 ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமையே தொடங்கி விட்டதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் அமெரிக்காவில் நிவாரணத்தை மீறியும் வேலையிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் நம்பிக்கை ஏறக்குறைய முடிந்து போனதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

ஆனாலும் மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உள்ளதாக ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13% பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 10,000 கணக்கானோரும் வேலை விடுவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

யுஎஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் கொடுக்க மேலும் 25 பில்லியன் டாலர்கள் தொகையை அரசிடமிருந்து கோரியது.

நிவாரணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இந்த விமான நிறுவனங்கள் ஊழியர்களிடம் மெமோவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 1600 பைலட்கள் 19,000 ஊழியர்களை பணி விடுவிப்பு செய்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 13,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை காலை எழுந்திருக்கும் போது பல பத்தாயிரம் பேர்களுக்கு வேலையிருக்காது என்று விமான ஊழியர்கள் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here