கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு – 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு

கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வில் 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் சிந்து கங்கை நதிக்கரை ஓரத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட தமிழர் நாகரிகங்களை உலகறியச் செய்ய கூடிய அகழாய்வு துவங்கியது. மூன்று கட்டமாக முதலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப் பட்டது. அதை தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாம் கட்டமாக இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறாம் கட்டமாக இறுதியான அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தது. இன்றுடன் இந்த ஆய்வு பணிகள் நிறைவடைந்து. இந்த ஆறாம் கட்ட ஆய்வில் மட்டும் 2430 தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முதுமக்கள் தாழி மணலூரில் அறைகலன்கள்,, உறைகிணறுகள் செங்கற்களால் ஆன கட்டடம், விலங்கின் எலும்புக்கூடுகள் என பல்வேறு பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. சுடுமண்ணால் ஆன முத்திரையும் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here