நேபாளத்துக்கு 41 ஆம்புலன்ஸ் நன்கொடை வழங்கிய இந்தியா

மஹாத்மா காந்தியின் பிறந்தநாளான நேற்று, நம் நாட்டின் சார்பில், அண்டை நாடான நேபாளத்திற்கு, 41 ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.இதுகுறித்து, காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை

மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நம் தரப்பில் நேபாளத்தில் செயல்படும் பல்வேறு அமைப்பினருக்கு, 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகள், நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றுடன், நம் நாட்டின் சார்பில், 1994 முதல், அந்நாட்டிற்கு, 823 ஆம்புலன்ஸ்கள்  வழங்கப்பட்டுள்ளன.தற்போது வழங்கியுள்ள சிறப்பு வகை ஆம்புலன்ஸ்களில், வென்டிலேட்டர், இ.சி.ஜி., கருவிகள், சக்கர நாற்காலி, இணைய சேவை வசதிகள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here