முக்கிய அதிகாரிகள் மட்டுமே நாட்டிற்குள் வர அனுமதி: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: உத்தியோகபூர்வ விஷயங்களுக்காக அமைச்சர்களாகவோ அல்லது உயர் பதவியில் உள்ளவர்களாகவோ இருக்கும் வெளிநாட்டு அதிகாரிகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு அதிகாரிகளும் கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைபிடிக்க வேண்டும் என்று சிறப்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்எஸ்சி) கூட்டம் முடிவு செய்ததாக தற்காப்பு  அமைச்சர் (பாதுகாப்பு) மேலும் தெரிவித்தார்.

பிரதிநிதிகள் அனைவரும் மலேசியாவின் அனைத்துலக விமான நிலையங்களுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஸ்வைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு ஸ்வைப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று சனிக்கிழமை (அக். 3) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இதில் தூதுக்குழுவின் தலைவரும் அடங்குவதாக அவர் கூறினார். தூதுக்குழுவின் இருப்பு உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அல்லது பலரை ஈடுபடுத்தாத விழாக்களுக்கு இருக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்.

தூதுக்குழு விமான நிலையத்திலிருந்து தங்களின் தங்குமிடத்திற்கும், சந்திப்பு இடத்திற்கும் விமான நிலையத்திற்கும் திரும்பிச் செல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மலேசியாவிற்கு அவர்கள் வருகை விமானப் பயணம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ விஷயங்களில் மலேசிய தலைவர்களும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கண்டிப்பான SOP களைப் பின்பற்ற வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அவர்கள் நாடு திரும்பியதும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். விதிவிலக்கு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here