இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை

உலகம் முழுவதுமே COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தமிழ்நாட்டின் இந்த வினோதமான சிறிய பழங்குடி கிராமம் ஒரு அதிசயத்தைக் கண்டுள்ளது. இது கொரோனா வைரசை இது நாள் வரை தன்னிடம் அண்டவிடாமல் தடுத்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள எளிமையான வாழ்க்கை முறையும் சுத்தமான சூழலும்தான் இதற்குக் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நாகர்கோயிலிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள தோவலைத் தொகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கிராமம் கீரிப்பாறை ( Keeriparai). இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஏராளமாக உள்ளன. மொத்தம் 103 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தின் மக்கள் தொகை 550. இவர்களில் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்கள்.

ரப்பர் தோட்டங்களை பராமரிப்பது மற்றும் ரப்பர் தட்டுதல் ஆகியவையே இவர்களின் முக்கிய தொழிலாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கத்திலிருந்தே ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த கிராமம் COVID-19 தொற்றுநோயிலிருந்து தப்பி வந்துள்ளது.

கிராமத்தில் யாருக்கும் சாதாரண காய்ச்சல் கூட வரவில்லை என்றும், அதனால், இங்கு யாருக்கும் இதுவரை மருத்துவமனைகளுக்கான தேவை வந்ததில்லை என்றும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

“நாங்கள் நெரிசல் மிகுந்த மனித வாழ்விடங்களிலிருந்து விலகி, தொலைவில் வாழ்கிறோம். தூய்மையான காற்று, சுத்தமான நீர் மற்றும் அமைதியான சூழலுடன் அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறோம். இப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள் வழியாக பாய்வதால், இங்குள்ள நீரிலேயே அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. அவை எந்தவொரு நோயையும் விரட்டி விடும்.” என்று கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

“எங்களைப் பார்வையிட வந்து எங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அதிகாரிகள் மூலம் இந்த நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் தூய்மையைக் கடைப்பிடித்து வருவதால், எங்கள் கிராமத்தில் இதுவரை யாருக்கும் இந்த நோய்க்கான எந்த அறிகுறிகளும் வரவில்லை” என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.

தங்கள் கிராமத்தில் யாருக்காவது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அதற்குத் தாங்கள் அருகில் உள்ள சில மருத்துவமனைகளை நம்பியுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் குறுகின்றனர். லாக்டௌன் காலத்தில், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

“ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டாலொழிய, நாங்கள் கிராமத்திலிருந்து வெளியே செல்வதில்லை. எனவே இங்கே தனி மனித இடைவெளி (Social Distancing) மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றிற்கான அவசியமும் இருக்கவில்லை” என்று ஒரு கிராமவாசி கூறுகிறார். இந்த கிராமத்து மக்கள் அவசர தேவை இல்லாமல் தங்கள் கிராமத்திலிருந்து வெளியே வரமாட்டார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கிராம மக்கள் அனைவரும் எஸ்டேட் தொழிலாளர்கள் என்பதால், எஸ்டேட் உரிமையாளர்கள் அவர்களின் தேவைகளை கவனித்துக்கொள்கிறார்கள். இங்கிருக்கும் பெரும்பாலான வீட்டுக் குழந்தைகள் விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால், குழந்தைகள் இப்போது பெற்றோருடன் கிராமத்தில்தான் இருக்கிறார்கள்.

“இந்த கிராம மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் தூய்மை பற்றி மிகவும் விழிப்புணர்வோடும் அக்கறையோடும் இருக்கிறார்கள். எனவே இவர்கள் நோய்வாய்ப்படுவது மிக அரிது. இவர்களது வாழ்க்கை முறை, ஒழுக்கம் மற்றும் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் இவர்கள் காட்டும் அக்கறை ஆகியவற்றை பிறரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என இந்த கிராமத்தைப் பற்ரி அறிந்த அனைவரும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here