கபெ ரணசிங்கம் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா…?

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் OTT எனப்படும் Zee 5 ஆன்லைன் தளத்தில் நேற்று முன்தினம் வெளியாகியது.

படம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு சிறப்பாக உள்ளது என்றும். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் நடப்பு பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த அனைவரும் கருத்து தெரிவித்தனர். திரையரங்கிற்கு செல்லாத ஒரு தரமான படம் என்று மக்களால் முதல் நாளே முத்திரை குத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தற்ப்போது அனைத்து ரசிகர்களின் பாசிடிவ் விமர்சனத்தை வெற்றி கொண்டாட்டமாக படக்குழு கொண்டாடும் வகையில் முதல் நாள் வசூலே பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளிலே 70 ஆயிரம் பேர் ரூ 199 கொடுத்து ஆன்லைன் தளத்தில் படத்தை பார்த்துள்ளனர். அதன்படி ரூ 1.4 கோடி வரை வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. OTT வெளியான ஒரு சிறந்த படம் என்ற பெருமையை பெற்றதுள்ளது. தியேட்டர் ரிலீஸ் இல்லாமலே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் இப்படக்குழு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here