காப்பிட் நோக்கி மோட்டார் சைக்கிள் பயணம்

சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜொஹாரி துன் ஓபெங் ஒரு வேலை விஜயம் சிபு வில் இருந்து 168-கிமீ மோட்டார் சைக்கிள் பயணத்தை பணி நிமித்தம் மேற்கொண்டார்.

தனது நீல 1800 சிசி ஹோண்டா கோல்ட்விங் ட்ரைக் மோட்டார் சைக்கிளைக் கொண்டு, காலை 8.30 மணியளவில் சிபுவில் சிபு ஜெயாவுக்கு அருகிலுள்ள ஈகோ கார்டனில் இருந்து காப்பிட் பயணத்தில் உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, சரவாக் துணை முதல்வர் டான் ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் ,மாநில சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சர் டத்தோ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா ஆகியோரும் உடன் சென்றனர்.

பயணத்தின்போது, ​​இடங்களையும் நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அப்பகுதிகளின்  நிலைமைகளைக் கண்டறிந்தார்.

வழியில், கனோவிட் நகரம், நங்கா நங்குன் மீள்குடியேற்றத் திட்டம் பற்றித்தெரிந்துகொண்டார். அங்கு அந்தந்த பகுதிகளின் வளர்ச்சி குறித்து விளக்கம் பெற்றார்.

காப்பிட்டில் அழகான இடத்தை தொலைக்காட்சியில் காட்டலாம். இந்த இடம் திரைப்படத் தயாரிப்பு அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்கான இடமாக இருக்கலாம், அநேகமாக நாம் காப்பிட்டில் ஒரு ஹீரோவை (நடிகரை) காணலாம்  என்று அவர் கூறினார்.

காப்பிட் நகரத்திற்கான இரண்டு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அபாங் ஜோஹரி மொத்தம் வெ. 73 மில்லியன் ஒப்புதல் அளித்தார்.

ஒன்று வெ. 58 மில்லியன் காப்பிட் வாட்டர்ஃபிரண்ட் கட்டம் III திட்டம், இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா ,  ஒரு பாரம்பரிய மையத்தை உள்ளடக்கியது, மற்றொன்று வெ.15 மில்லியன் நகர சந்தை.

காப்பிட்டிற்கு நிறைய கார்கள் வரும். சாலையோரம் இனி விவசாயிகள் தங்கள் பண்ணை விளைபொருட்களை விற்க ஏற்றதாக இருக்காது.

எனவே நாங்கள் அவர்களுக்கு வர்த்தகம் செய்ய  ஓர் இடத்தை உருவாக்குவது மட்டுமே சரியானது .

சிபுவில் நடந்த பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்துவின் மத்திய பிராந்திய சிறப்பு மாநாட்டின்போது வரவிருக்கும் மாநிலத் தேர்தலைக் குறித்து சைகை காட்டிய அபாங் ஜோஹாரி, சரவாக்கை ஆட்சி செய்ய கபோங்கான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) க்கு மக்கள் தொடர்ந்து தங்கள் ஆணையை வழங்கினால் மாநிலத்திற்கு மேலும் வளர்ச்சி வரும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here