முதல்முறையாக காலிறுதி சுற்றில் கிரீஸ் நாட்டவர்

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here