ஒவ்வொரு சீசன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பிரபலங்கள் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதைகளில் பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினத்தில் நடிகர் ஆரி தான் கடந்து வந்த பாதைகளை விளக்கியுள்ளார். தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் நான் மட்டும் படிப்பு வராமல் சுற்கிக்கொண்டிருந்தேன் அப்பொழுது எனது தந்தை கடைசியாக இருந்த எனது சிறுவயது செயினை ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்று அந்த பணத்தைக் கையில் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
வாய்ப்பு தேடி அலைந்த போது நடிகர் சேரன் தன்னை அழைத்து வாய்ப்பு கொடுத்து, தேசிய விருது பெற்ற ஆடும் கூத்து என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். ஆனால் அப்படம் திரைக்கு வராமலே போய்விட்டது. அதன் பின்னர் என்னுடைய தந்தை இறந்த பின்பு தனது தாய் தன்னை கவனித்துக்கொள்ள தன்னிடம் வந்துவிட்டார்.
திடீரென ஒருமுறை தூக்கத்தில் எழுந், அப்பா எங்கே என்று கேட்டு அலைந்துகொண்டிருந்தார். அதன்பின்பு விசாரித்த பின்பு கனவாக இருக்கலாம் என்று கூறிவிட்டார்.
பின்பு தான் தெரிந்தது என்னுடைய அம்மாவிற்கு பார்க்கின்சன் நோய் இருக்கிறது என்று அந்த நோய்வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது கைகால்கள் எல்லாம் சரியாக வேலை செய்யாது. படவாய்ப்பு குறித்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், அம்மா மாடியிலிருந்து தவறிவிழுந்து விட்டதாகவும், தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்பு குழந்தையாகவே மாறிவிட்டார். நாகேஷ் திரையரங்கம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது என் அம்மா இறந்துவிட் டதாக நடிகர் கூறி கண்கலங்கினார்.