கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அஃரிபாய் தலைமையில் 75 அதிகாரிகள் மற்றும் 4 ராணுவ அதிகாரிகளுடன் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு சென்று அனைவரும் எஸ்ஓபியை கடைபிடிக்கின்றரா என்பது குறித்து பார்வையிட்டனர்.
அந்த வகையில் பண்டார் பாரு செலாயாங் வட்டார உணவகங்களுக்கு சென்று பார்வையிட்டபோது தங்களின் சுய விவரங்களை எழுதாத 43 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 10 பேர் கடை முதலாளிகளும் தேதி உள்ளிட்ட விவரங்களை சரிவர எழுதாத காரணத்தால்
அவர்களுக்கும் சேர்த்து மொத்தம் 52 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டது.
ஏசிபி அஃரிபாய் கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் கூறியிருக்கும் எஸ்ஓபியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.