இங்குள்ள கெப்போங் பாருவில் தரைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 வயதான சீன ஆடவர் உயிரிழந்தார். குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தபோது தீ பரவியதாக அவர் அந்த வீட்டில் தனியாக இருந்ததாகவும் அம்முதியவர் பக்கவாதம் (ஸோர்க்) ஏற்பட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.
தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்த பின் வீட்டிலுள் கருகிய நிலையில் இருந்த உடலை பார்த்தனர்.
தீ பரவியதற்கான காரணம் மற்றும் சேதாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செந்தூல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தலைவர் முகமட் ஹைசான் பின் ஹசான் தெரிவித்தார்.
மேல் விசாரணைக்காக செந்தூல் மாவட்டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் டேனியல் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததோடு தீயில் உயிரிழந்த முதியவரின் உடலை சவபரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.