முகக்கவசம் அபராதம் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம்

திருவாடானை சப்-டிவிஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.60 ஆயிரம் வசூல் ஆனது.திருவாடானை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.இதில் நேற்று மட்டும் 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.60 ஆயிரம் வசூல் ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here