செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் நேரடியாக களம் இறங்கினார்

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றினை தடுக்க அரசாங்கம் தற்போது சிஎம்ஓசியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது கோலாலம்பூரிலும் சிஎம்சிஒ அமலில் உள்ளது.


அரசாங்கத்தின் முயற்சிக்கு காவல்துறையினரும் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சண்முக மூர்த்தி நேரடியாக சாலை தடுப்பு சாவடிக்கு பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசியபோது பெரும்பாலான பொதுமக்கள் எம்சிஓவை பின்பற்றுகின்றனர் என்றார்.

பொதுமக்களை சிரமத்தில் தள்ளுவதற்காக இந்த நடவடிக்கை இல்லை என்றும் ஆனால் கோவிட் தொற்றின் தாகத்தை பொதுமக்களும் புரிந்து வைத்திருக்கின்றனர் என்றார். மேலும் செந்தூல் வட்டாரத்தை சுற்றி தினமும் சாலை தடுப்புகள் அமைக்கப்படும் என்றும் ஏசிபி சண்முக மூர்த்தி தெரிவித்தார்.


தினமும் காலையில் பசார், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சோதனை செய்து வருவதாகவும் அதே வேளை உணவக விநியோகஸ்தர்கள் இரவு 10 மணியோடு தங்களின் ஆர்டரை முடித்து கொள்ளுமாறும் கேட்டு கொண்டார். இவ்வாரத்தில் இது வரை 10 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here