தடுப்பூசிக்கு மலேசியா முன்னுரிமை

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதத்தை பாதுகாப்பாக செய்தபின், தடுப்பூசியை உடனடியாக பெறலாம் என்பதை உறுதி செய்வதாக  அமைச்சரவை கூறியது.

அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புதுறை அமைச்சர் கைரி ஜமாலுடீன் ஓர் அறிக்கையில், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபாவும்  இதற்கு தலைமை தாங்குவாதாக தெரிவித்தார்.

அனைத்து மலேசியர்களின் பயன்பாட்டிற்கான தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் கவனமாக பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக சிறப்புக் குழுவை அமைப்பதற்கான முடிவு முக்கியமானது என்று அவர் கூறினார்.

இந்த குழு கோவிட் -19 தடுப்பூசி கையகப்படுத்தல், விநியோக கட்டமைப்பைத் தயாரித்து மலேசியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்போது திட்டமிடும் என்று கைரி கூறினார்.

திட்டத்தை செயல்படுத்த எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் குறிப்பிட்ட வேலை நோக்கங்களைக் கொண்ட பல துணைக்குழுக்கள் அமைச்சுகள் ,முகவர் நிலையங்கள் அமைக்கப்படும், என்றார்.

தடுப்பூசி, தகவல் தொடர்பு, பதிவு  ஒப்புதல், வர்த்தக வசதி, நிதி, சேமிப்பு, தளவாடங்கள் , போக்குவரத்து, அத்துடன் தடுப்பூசி விநியோகம் ஆகியவை வேலை நோக்கங்களில் அடங்கும்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடீன் யாசின், சீனாவிலிருந்து கோவிட் -19 தடுப்பூசி மலேசியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்தபின் மலேசியாவை தடுப்பூசியின் முன்னுரிமை பெறுநராக பட்டியலிட குடியரசு ஒப்புக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here