பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசார் ஜாலான் ஹன் துவா 2, சாலா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த சோதனை மேற்கொண்டதில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 பேரில் 23 பாக்கெட் எம்டிஎம்ஏ போதைப் பொருள் 341.45 கிராம், 8 பிளாஸ்டிக் பாக்கெட் கெத்தமின் 79.02 கிராம், 15 பாட்டில் எம்டிஎம் ஏ 6.19 லிட்டர், எஸ்தஸ்டிக் மாத்திரை 3.77 கிராம், ஹெரோயின் 42 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 33,837 வெள்ளி மதிப்பாகும்.

கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒரு நபர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அம்பாங் பாண்டான் இண்டா மற்றும் கூச்சாய் லாமா ஆகிய இடங்களில் இருந்து சீன ஆடவரிடம் போதைப் பொருளை வாங்குவதாகவும் தகவல் அறியப்படுகிறது.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட சீன ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் 4 பேருக்கு ஏற்கெனவே போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றப்பதிவு இருப்பதோடு அதில் இருவர் ஶ்ரீ பெட்டாலிங் மற்றும் பூச்சோங் ஆகிய காவல்துறையினர் 2018 ஆம் ஆண்டின் ஒரு வழக்கில் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது முதல் 25 வயதுடையோர் என்பதோடு 6 பேரில் 5 பேர் போதைப் பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அனைவரும் 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு செக்ஷன் 39(b) கீழ் விசாரணை நடத்தி வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைருல் நிஷாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹெல்மி கூறினார்.
இது போன்ற போதைப் பொருள் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03- 2297 9222 என்ற் எண்னில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.










