கொரோனா பாதிப்பு தமன்னா உருக்கம்

தன்னை கொரோனாவில் இருந்து மீட்ட மருத்துவ குழுவினருக்கு, நடிகை தமன்னா நன்றி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் படப்பிடிப்புக்காக, ஐதராபாத் சென்ற போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தமன்னா. ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.இது குறித்து, ‘டுவிட்டரில்’ தமன்னா கூறியதாவது:டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, நான் எவ்வளவு நன்றி உள்ளவளாக இருக்கிறேன் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் நோய் வாய்ப்பட்டு இருந்தேன், பலவீனமாக இருந்தேன்; பயந்தேன். ஆனால், நான் வசதியாகவும், சிறந்த முறையில் சிகிச்சை பெறவும், மருத்துவ குழுவினர் உதவி செய்தனர். கருணையும், நேர்மையான அக்கறையும், அனைத்தையும் சிறப்பாக ஆக்கியது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here