ஊரடங்கால் வேலை இழப்பு: தனியார் ஊழியர் தற்கொலை

ஆவடி பருத்திப்பட்டு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவி(36).  தனியார் நிறுவன ஊழியர். கடந்த 6 மாதமாக ரவிக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள், நண்பர்களிடம் வீட்டு செலவுக்கு கடன் வாங்கியுள்ளார். மேலும், அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரவி வீட்டில் மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here