உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,06,47,566 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,03,52,918 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,22,984 பேர் உயிரிழந்துள்ளனர்
உலகம் முழுவதும் தற்போது 91,71,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 72,805 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 84,56,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,25,222 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.