ஜாலான் ரவாங்கில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு காலையில் பணிக்கு வந்த ஊழியர் அலுவலகம் அலங்கோலமாக கலைந்திருப்பதை கண்டு தனது முதலாளிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விவரம் அறிந்து அலுவலகம் வந்த முதலாளி பல பொருட்கள் களவாடப்பட்டிருக்கிறது என்றும் அதன் மதிப்பு 3,000 வெள்ளி என போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரினை பெற்ற ரவாங் போலீசார் நள்ளிரவு 1.30 மணியளவில் பாசா ராயா என்ற கடையில் கேங் லக்சா கும்பலை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் பொருட்களை பறிமுதல் செய்ததோடு தாமான் துன் கேஜான் என்ற பகுதியில் மேலும் ஒரு இருவரை கைது செய்துள்ளனர்.
26 வயது முதல் 28 வயதிலான கைது செய்யப்பட்ட 4ஆவது நபரின் பெயர் லக்சா எனவும் இவர்கள் நால்வரும் தாமான் பெர்சத்து ரவாங் என்ற இடத்தில் 4,500 வெள்ளி மதிப்பிலான பொருட்களை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செக்ஷன் 457 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நாளை 21.10.20 வரை இவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதோடு அனைவரும் மீதும் குற்றப்பதிவு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து ஒரு இரும்பு பெட்டி, 7 கைபேசி, எஸ்ஒய்எம் என்ற மோட்டார் சைக்கிள், ஒரு சங்கிலி மற்றும் ஒரு மோதிரம் ஆகியவற்றுடன் 261 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருப்பதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தாராவே உறுதிப்படுத்தினார்.