பண மோசடி தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு அமைப்பால் (எம்.ஏ.சி.சி) சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நபர்கள் சீனாவில் இருந்து வருகின்றவர்களைக் குறிவைக்கும் மோசடிக் கும்பல் என்று நம்பப்படுகிறது.
புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோ ஹுசிர் மொகமட் கூறுகையில், எடி கண்ணா , கோ லியோங் யியோங் என அழைக்கப்படும் இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயலபடுவதாகக் கூறினார்.
குடியிருப்புக்கள் கணினி, தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கூடிய கால் செண்டர்கள் நடத்துநரான அல்வின் என்றும் அழைக்கப்படும் கோ, அக்., 11 இல் எம்.ஏ.சி.சி தலைமையகத்தின் வேலியைத் தாண்டி தப்பித்தவர்.
அவர்கள் இருவரும் சீனாவின் பாதிக்கப்பட்டவர்களை குறிவைப்பவர்கள். இவர்கள் மலேசியாவில் ஆன்லைன் மோசடிகளில் சம்பந்த்தப்பட்ட்டவர்கள் என்று சில தரப்பினர் கருதுவது தவறானது.
மோசடிக்காக பணியமர்த்தப்பட்ட சீன நாட்டினருக்கு இணைய சேவைகளை தயாரிப்பதில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, எடி கண்ணா விடுவிக்கப்படுவார் என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஏனெனில் அவர் இப்போது குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) 1953 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கோ என்பவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சிண்டிகேட்டின் அலுவலகங்கள் , சொகுசு குடியிருப்புகளில் இருந்து இயங்கும் கால் செண்டர்கள், சீன குடிமக்களை ஆன்லைன் சூதாட்டத்தில், பிற மோசடிகளில் ஈட்டுபட இலக்காகக் கொண்டுள்ளது.