எம்சிஓவை மீறியவர்களுக்கு சம்மன்

செராஸ் வட்டாரத்தில் எம்சிஓவை மீறிய மூவருக்கு அபராதம் வழங்கப்பட்டதோடு உணவக உரிமையாளர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டது.

இன்று மதியம் பண்டார் தாசேக் பெர்மாய்சூரி வட்டாரத்தில் இயங்கி வரும் உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் மொக்சின் முகமட் ஜோன் தெரிவித்தார்.


சிஎம்சிஓ ஆரம்பித்த இந்த 10 நாட்களில் 95 சம்மன்களை வழங்கியிருக்கிறோம். 22 பேர் தங்களின் சுய விவரங்களை எழுதாவர்கள் என்றும் 18 சம்மன் கடை உரிமையாளர்களுக்கும் 27 கடையில் உணவருந்த வந்தவர்கள்,23 பேர் முகக்கவசம் அணியாதவர்கள், அதிகமானோர் காரில் பயணித்த 4 பேர், அதிக சத்தத்துடன் கிளப் நடத்திய உரிமையாளர் ஒருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டது.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையில் 17 போலீஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்ததாகவும் இந்த சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் முன்பை விட தற்பொழுது அதிகமானோர் எஸ்ஓபியை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் 100 விழுக்காடு எஸ்ஓபியை கடைபிடிக்கும் வரை சோதனை நடைபெறும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here