விண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி

நாசா விண்கலம் சேகரித்த விண்கல் துகள்களின் கொள்கலனில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சரி செய்யும் பணி நடக்கிறது எனவும் நாசா தெரிவித்துள்ளது.சூரிய குடும்பம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு தோன்றியது என்பதை அறிய, ‘பென்னு’ விண்கலத்தில் துகள்களை எடுத்து ஆய்வு செய்யும் திட்டத்தை நாசா தொடங்கியது. இதற்காக 2016ல் அனுப்பிய ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலம், கடந்த அக்.,22ல் வெற்றிகரமாக விண்கல்லில் தரையிறங்கியது. 11 அடி நீளமான கை போன்ற ரோபோ, விண்கல்லில் துளையிட்டு பாறை துகள்களை சேகரித்தது. ஆனால் அத்துகள்கள் அடங்கிய கொள்கலனில் தற்போது கசிவு ஏற்பட்டுள்ளது. இதை விண்கலத்துக்குள் பாதுகாப்பாக வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இதில் எவ்வளவு துகள் இருக்கும் என அளவிடும் வாய்ப்பு இனி இல்லை என திட்டத்தின் தலைவர் டான்டி லரெட்டா தெரிவித்தார். 400 கிராம் சேகரித்திருக்கும் என நம்புவதாகவும், ஆராய்ச்சிக்கும் 60 கிராம் மட்டுமே தேவை என்றும் அவர் கூறினார். 2021 ஏப்ரலில் பூமிக்கு திரும்ப தொடங்கும் விண்கலம், 2023 செப்.,27ல் பூமியை வந்தடையும். அப்போதுதான் எவ்வளவு சேகரித்தது என்ற விவரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here