விஜய்க்கு ஜோடியாக மகேஷ்பாபு மனைவி

விஜயை வைத்து இயக்குனர் ரமணா இயக்கிய திரைப்படம் திருமலை. விஜயின் முந்தையை சில படங்கள் தோல்வியை அடைந்த நிலையில், திருமலை வெற்றிப்படமாக அமைந்து விஜயின் கேரியரை தூக்கி நிறுத்தியது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். சாதராண மெக்கானிக்கான விஜய் பணக்காரப்பெண் ஜோதிகாவை ஒருதலையாக காதலிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், ஜோதிகாவுக்கு முன்பு அந்த வேடத்தில் நடித்தவர் நடிகை நம்ரதா ஷிரோத்கர். அவரை வைத்து சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகி விட அவருக்கு பதில் ஜோதிகா நடித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பின்னாளில் நம்ரதா தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here