PH-BN வெற்றிக்குப் பிறகு சிலாங்கூருக்கு திங்கட்கிழமை விடுமுறை

கோலாலம்பூர், அகஸ்ட்டு 13:

சிலாங்கூர் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் (PH) -பாரிசான் நேசனல் (BN) கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, திங்கட்கிழமை (அகஸ்ட்டு 14) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில தேர்தலில் PH 31 இடங்களை வென்றதாக தேர்தல் ஆணையம் (EC) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அதே நேரத்தில் BN 2 இடங்களையும் பெற்றது.

இது PH-BN உடன்படிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது, அத்தோடு தொடர்ந்தும் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்த உதவுகிறது.

அதே நேரத்தில் பெரிகாத்தான் நேஷனல் 21 இடங்களைப் பெற்றிருந்தது, கோத்தா அங்கெரிக் மற்றும் குவாங் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே, ஆகஸ்ட் 12 தேர்தலில் போட்டியிட்ட 56 இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை பெற்ற பிறகு, சிலாங்கூரில் PH வெற்றி பெற்றதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here