ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால்…

ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர்.

கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூது போல ஆடும் விளையாட்டுகள் அதிகரித்து விட்டது. அதிலும், தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி அதில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளாகி தங்கள் உயிரை மாய்த்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய குமரேசன் எனும் இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். எனவே அதில் தனது பணத்தை அதிகளவில் இழந்த அவர், மன உளைச்சலால் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here