ஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இவற்றில் மான் கராத்தே படம் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். மற்ற எல்லாப் படங்களும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டவை.

ரங்கூன் படத்துக்குப் பிறகு படத்தயாரிப்பில் இறங்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறாராம்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முறிந்ததும் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குவது எப்படி?

அவரே பணம் போட்டு படம் தயாரிக்கவிருக்கிறாரா? என்றால் இல்லையாம்.

இம்முறை அவர் சோனி நிறுவனத்துடன் இணைகிறாராம். அந்நிறுவனம் பணம் போடும். இவர் படம் தயாரித்துக் கொடுப்பார் என்கிறார்கள்.

இம்முறையில் மூன்று படங்களைத் தொடங்கவிருக்கிறார்களாம்.

அவற்றை, இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா ஆகிய மூன்று இயக்குநர்களை வைத்துப் படங்களைத் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவற்றின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் ஒப்பந்தங்கள் இறுதியான பின்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here