ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தற்போது பின்னணி இசை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார் இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தினை பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் பின்னணி இசை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.’இப்ப போட்றா பால’ என்று சிம்பு குரலுடன் ஆரம்பமாகியுள்ள இந்த பாடலின் மியூசிக் அனைவரையும் கவர்ந்துள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
The Beats of #Eeswaran 🥁 on @thinkmusicindia 🎶 !!
A @MusicThaman Musical 🥁#Susienthiran @offBharathiraja @madhavmedia @DCompanyOffl @AgerwalNidhhi @DOP_Tirru @editoranthony @YugabhaarathiYb @DabbooRatnani @tuneyjohn @gobeatroute pic.twitter.com/jQFyT0pFwT
— Silambarasan TR (@SilambarasanTR_) October 27, 2020