அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இவ்வளவு செலவா..!

அமெரிக்காவின் வரலாற்றில் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், மிக அதிக செல்வாகும் தேர்தலாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3ந் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இருவரும் ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் ஜோ பைடன், அவரது மனைவி ஜில்லும் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தார். அதேபோல், கடந்த சனிக்கிழமை தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஃபுளோரிடாவில் வாக்களித்தார்.

இந்திலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் அமைய உள்ளது.

இந்த தேர்தலுக்கு, 11 பில்லியன் டாலர் செலவாகும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 14 பில்லியன் டாலருக்கு மேல் செலவாகும் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாக 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here