உற்சாகத்தில் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியாவுக்கு, இந்த கொரோனா காலம் சமைக்க கற்றுக் கொடுத்துள்ளது. இது குறித்து, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது:என் வாழ்க்கையில், நடிப்பு மற்றும் நான் பாடும் பாடல் குறித்து, யாராவது எதாவது சொன்னால், நான் பணிவாக சிரித்து விட்டு சென்று விடுவேன். ஆனால், நான் செய்யும் கேக் உள்ளிட்டவற்றை பற்றி பேசினால், நான் உற்சாகமாகி விடுவேன். ஊரடங்குக்கு முன், சமையல் அறையில் நுழைந்ததே இல்லை. ஆனால், இந்த, ஆறு மாதத்திற்குள், பெரிய சாதனை செய்தது போல் உணர்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here