சசிகலாவுக்கு என்னுடைய ஆதரவு-ஆளும் கட்சி எம்எல்ஏ

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ், என்னைப்பொறுத்தவரை ரஜினிகாந்த் உலக அறிந்த சூப்பர் ஸ்டார். அவருக்கு அரசியல் என்பது அறியாத, புரியாத, தெரியாதவர். அவருக்கு அனுபவம் கிடையாது. அவர் ரசிகர்கள் 40 ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கூறிவருகின்றனர்.

என்னை பொறுத்தவரையில் அவர் அரசியலுக்கு வந்து அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்து அவர் பெற்ற இன்பங்களை தொலைத்து விடக்கூடாது. மகிழ்ச்சியோடு அவர் தற்போது உள்ள புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

மேலும், சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நான் திருவாடனை தொகுதியில் எம்எல்ஏ ஆவதற்கு சசிகலா ஒரு காரணம். சமூகநீதி எண்கள் அமைப்பு என்றும் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும். டிடிவி தினகரன் டெல்லி பயணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நான் வரவேற்கிறேன்.

எங்கள் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எந்த அரசியல் கட்சிக்கும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு உறுதுணையாக இருக்கும். பாஜக அறிவித்துள்ள வேல் யாத்திரை நடைபெறும். அதே நாள் அதே நேரத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக தெய்வீக ரத யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here