அப்பாவுடன் விஜய் பேசாததற்கு காரணம் இதுதான்..

நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்க முயன்றது கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி  விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து  மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.   சற்று நேரத்திலேயே விஜய் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், என் தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறிய விஜய், அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது  என்றும் கட்டளை என்றும் கட்டளை விடுத்தார். இந்நிலையில் அடிக்கடி அரசியல் விவகாரங்கள் தொடர்பாக தன்னை தொல்லை செய்து வந்தால் கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அடுக்கடுக்காய் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் எஸ்.ஏ.சி. திணறிப்போனர். “விஜய்யும் நீங்களும் பேசுறது இல்லையாமே?” என்ற மட்டும் சற்றே சுதாரித்துக் கொண்டு, “ஏன் பேசுறது இல்ல கொரோனா லாக்டவுனில் கூட 3 முறை பார்த்து பேசினேனே என சற்றே பதற்றத்துடன் விளக்கமளித்தார்.

ஆனால் சற்று முன் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல்கள் எஸ்.ஏ.சியின் முகத்திரையை சுக்குநூறாக கிழித்துள்ளது. அரசியல் பற்றி தன்னிடம் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் கேட்காததால் எஸ்.ஏ.சியிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என உண்மையை போட்டுடைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here