ராஜி குழுமத்தின் ஏற்பாட்டில் டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையில் தீபாவளி அன்பளிப்பு

உலகமே கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் வசதி குறைந்த மலேசிய இந்தியர்களுக்கு ராஜி குழுமத்தின் ஏற்பாட்டில் 800 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது.

வருடந்தோறும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக நிர்வாக இயக்குநரான டத்தோ கணேசன் லட்சுமணன் தெரிவித்தார்.


இவ்வாண்டு சில ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பலகார பொருட்கள், ஆடை மற்றும் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

ராஜி குழுமத்தின் இயக்குநர்களான டத்தோ முகமட் அலி பின் மஸ்தான் மற்றும் டத்தோ கலை தங்கராஜு ஆகியோர் இந்த அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் நாம் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவது போல் வசதி குறைந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்களுக்கும் தீபத் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று உதவிய வழங்கிய ராஜி குழும நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here