6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற 2 வாலிபர்கள்

உத்தரபிரதேச மாநிலம் யுனாவில் சில மாதங்களுக்கு முன்பு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்து கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள காதம்பூர் என்ற இடத்தில் 6 வயது சிறுமியை 2 பேர் கற்பழித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த ஊரை சேர்ந்தவர் பரசுராம் குரில். இவருக்கு 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 21 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

எனவே சிறுமி ஒருவரின் நுரையீரலை எடுத்து வந்து பூஜை செய்தால், குழந்தை பிறக்கும் என்று சாமியார் ஒருவர் கூறியுள்ளார். அதை நம்பிய பரசுராம் குரில், தனது நண்பர்கள் அன்குல் குரில்(வயது 20), பீரன் (வயது 31) ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்து சிறுமியின் நுரையீரலை கொண்டு வந்தால் அதிக பணம் தருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அதே ஊரை சேர்ந்த 6 வயது சிறுமி பட்டாசு வாங்குவதற்காக வெளியே வந்தார். அவரை அன்குல் குரில், பீரன் ஆகியோர் கடத்தி சென்றனர்.

இருவரும் அப்போது மது போதையில் இருந்தனர். அவர்கள் அந்த சிறுமியை காட்டுக்குள் வைத்து கற்பழித்தனர். அதை தொடர்ந்து மார்பை பிளந்து அவரது நுரையீரலை எடுத்தார்கள்.

அதை பரசுராம் குரிலிடம் கொண்டு கொடுத்தார்கள். அவர் குழந்தை வேண்டி வீட்டில் பூஜைகளை செய்தார்.

இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் காணாமல் போன சிறுமியை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தீவிரமாக தேடிய போது புதருக்குள் அவருடைய பிணம் கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி துப்பு துலக்கினார்கள்.

இதை தொடர்ந்து பரசுராம் குரில், அங்குல் குரில், பீரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பரசுராமின் மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்தார். எனவே அவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

பூஜை நடத்த ஆலோசனை கூறிய சாமியாரை தேடி வருகிறார்கள்.

இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை விரைவு கோர்ட்டில் விசாரித்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here