இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பொறுப்பு !

அமெரிக்காவில் ஆட்சி அமைக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஜோ பிடன். வரும் ஜனவரி மாதம் 20- ஆம் தேதி அதிபராக அவர் பதவி ஏற்கிறார். அதற்காக அதிகாரத்தை கைமாற்றும் குழுக்களை அவர் அமைத்தார். அவற்றில் 20 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றனர்.

ஜோ பிடன் அமைத்த கொரோனா பணிகளுக்கு அமைத்த மருத்துவக் குழுவிலும் இந்தியர்கள் இடம்பிடித்தனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட்டத்தகுந்தது.

இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஒரு பெண் அமெரிக்காவின் மிக முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜோ பிடனின் மனைவி ஜில் பிடனுக்கான கொள்கை இயக்குநர் எனும் பதவியில் இந்திய வம்சாவலி பெண்ணான மாலா அடிகா என்பவர் அமர விருக்கிறார்.

சிகாகோ யுனிவர்சிட்டியில் படித்த மாலா அடிகா, பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பணியாற்றியபோது கல்வி தொடர்பான திட்டங்களுக்கு உதவி செயலாளராகப் பணியாற்றியவர். ஜோ பிடனில் பிரசார வடிவமைப்பிலும் பங்கு வகித்தவர் என்பது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here