

ஜோ பிடன் ஒரு பலவீனமான அதிபராகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் (Zheng Yongnian) கூறியுள்ளார்.
பிடனின் நிர்வாகத்தின் கீழ் சீன – அமெரிக்க உறவு சீரடையும் என்று அரசியல் வல்லுநர்கள் எண்ணிவரும் நிலையில், அதற்கு நேர்மாறாக கூறியுள்ள யோங்னியான், ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான உறவு தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது என்றும் யோங்னியான் தெரிவித்துள்ளார்.
சீனா மீதான அமெரிக்க மக்களின் கோபத்தை பிடன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ள யோங்னியான், பிடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான அதிபராகவே இருப்பார் என்றும், உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்ல்லை. ஆனால், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபரான பிடன் போர்களைத் தொடங்கலாம் என்றும் யோங்னியான் கணித்துள்ளார்.