வழிப்பறிக் கொள்ளையில் நகைகளை இழந்தார்!

கோலாலம்பூர்:

ஒரு பெண் பத்தாயிரம் வெள்ளி மதிப்புள்ள இரண்டு தங்க கழுத்தணிகளை வழிப்பறியில் இழந்தார். கடந்த சனிக்கிழமை ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு மருந்தகத்தில் நடந்த வழிப்பறித் திருட்டுச் சம்பவத்தின் போது சந்தேக நபரால் முகத்தில் குத்தப்பட்டு நகைகளப் பறிகொடுத்தார்.

இரவு 8.45 சம்பவத்தில், ஒரு நபர் பாதிக்கப்பட்டவருக்கு பின்னால் வந்து, மருந்தகத்தில் பணம் செலுத்திவிட்டு திரும்பியபின் பாதிக்கப்பட்டவரின் கழுத்தணிகளைக் அபகரித்ததோடு  முகத்தில் குத்தியதாக வங்ஸா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டண்ட்  தெரிவித்தார்.

பின்னர் சந்தேக நபர் ஒரு வாகனத்தில்  தப்பி ஓடிவிட்டார்.  டிவி காட்சிகளைப் பயன்படுத்தி ஆரம்ப விசாரணையில் முகமூடி அணிந்த இருவரின் அசைவுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

“சந்தேக நபர்களை அதிகாரிகளை குழப்புவதற்காக தவறான பதிவு தகடுகளைப் பயன்படுத்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் 017-713 4705 என்ற எண்ணில் மூத்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஷாஹ்ரிசால் சாலே, 013-933 8214 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here