இளஞ்சிவப்பு நிறம் ஊழியர்களுக்கானது!

ஜோகூர் பாரு 

கடந்த இரண்டு நாட்களில் வைரஸ் தொற்றுக்கான இளஞ்சிவப்பு பட்டையுடன் டேசா உத்தாமாவில் உள்ள ஒரு கடையில் அருகே ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று ஜோகூர் மாநில சுகாதார துறை (JKNJ) உறுதிப்படுத்தியது. இவர் கோத்தா  திங்கி சுகாதார அலுவலகத்தின்  (PKDKT) இன் ஊழியராவார்.

ஜே.கே.என்.ஜே இயக்குநர் டத்தோ டாக்டர் அமான் ராபு, சுகாதார ஊழியரான இவர் சபாவுக்குச் செல்ல கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், மறைமுகமாக கண்காணிப்பு கைக்கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

கோவிட் -19 சோதனைக்கு கையணி  தேவையற்றது. கண்காணிப்புக்குட்பட்ட நபருக்கு (PUS) சொந்தமில்லை என்பதை PKDKT உறுதிப்படுத்தியது. இவர் மீத்உ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து PUS ஐ PKDKT தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here