சிறப்பு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கூடவிருக்கிறது

புத்ராஜெயா: வரும் வெள்ளிக்கிழமை பேராக் ஜெரிக் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சபா புகாயா மாநிலத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் (இ.சி) சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது.

“சிறப்பு கூட்டம் இடைத்தேர்தலின் முக்கியமான தேதிகளான தேர்தல் தேதி, நியமன நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்த தேர்தல் பட்டியல்கள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பிற ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கும்” என்று  செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.

இங்குள்ள மெனாரா எஸ்.பி.ஆரில் உள்ள  தலைமையகத்தில் காலை 9.30 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கானி சல்லே தலைமை தாங்குவார்.

ஜெரிக் நாடாளுமன்றத் தலைவரான  டத்தோ ஹஸ்புல்லா ஒஸ்மான் நவம்பர் 16 ஆம் தேதி இறந்தார். புகாயா சட்டமன்ற உறுப்பினரான    மனிஸ் முகா முகமது தாரா ஒரு நாள் கழித்து நவம்பர் 17 அன்று இறந்தார்.

நவம்பர் 18 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அஜீசன் ஹருனிடமிருந்து ஜெரிக் நாடாளுமன்றத் தொகை காலியாக இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்பு வந்ததாக இக்மால்ருடின் தெரிவித்தார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 54 பிரிவு (1) இன் படி, காலியிடத்தை நிரப்ப தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்துகிறது என்று அவர் கூறினார்.

ஹஸ்புல்லா 63, இதய நோயால் பஹாங்கின் ரவுப் நகரில் இறந்தார். 14 ஆவது பொதுத் தேர்தலில் 5,528 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் அந்த இடத்தை வென்றார்.

சபா மாநில அரசியலமைப்பின் பிரிவு 21 (5) இன் அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப ஒரு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

மனிஸ் முகா, 65, சிறுநீரக பிரச்சினை காரணமாக க்ளெனகிள்ஸ் மருத்துவமனையில் கோத்த  கினபாலுவில் இறந்தார். அக்டோபர் 26 அன்று நடந்த சபா மாநிலத் தேர்தலில் 6,005 வாக்குகள் பெற்று அவர் அந்த இடத்தை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here