நைட்டி அணிந்தால் ரூ.2,000 அபராதம்! தகவல் கொடுத்தால் ரூ.1,000 சன்மானம்!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்ற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் வட்டி என்ற இனத்தை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 9 பேர் தலைவர்கள். அவர்கள் சொல்வதை தான் மக்கள் கேட்பார்கள்.

இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் பெண்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

தடையை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் நைட்டி அணிந்துள்ள பெண்கள் குறித்து வட்டி இன தலைவருக்கு தகவல் தெரிவித்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம பெண்கள் சிலர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சென்று விசாரித்த போது யாரும் வட்டி தலைவர்களுக்கு எதிராக பேசவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here