பொம்மை வாழ்க்கை பொய்மை இல்லை!

வாலிபர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்து வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கஜகஸ்தான் நாட்டின் உடற்கட்டு கலைஞர் யூரி டோலோச்ச. இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பெண் வடிவிலான பொம்மை ஒன்றினை யூரி திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் பொம்மைக்கு மார்கோ என்று பெயரிட்டுள்ளார். மேலும் அந்த பொம்மையை 18 மாதங்களாக காதலித்து வந்த யூரி, தனது திருமண வாழ்க்கையை அதோடு தற்போது ஆரம்பித்துள்ளார்.

அவருடைய திருமணத்திற்கு யூரியின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த பொம்மை பெண்ணான மார்கோவின் உள்ளே ஒரு மென்மையான ஆன்மா இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இப்படி பாலியல் பொம்மையை ஒரு வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

கமெண்ட்: பொய் -மெய் ,(பொம்மை) இனி இல்லை தனிமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here