டிசம்பர் முதல் நாள் -உலக எய்ட்ஸ் நாள்

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேலாக இருக்கின்றன.  2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால், இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது.
சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம், கண்காணிப்பின் கீழ் இருந்தும் எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதில் 2,70,000  குழந்தைகள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின்பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ், தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.

தங்கள் யோசனையை எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குநர் முனைவர் ஜோனதன் மன்னிடம்நைருவரும் கொண்டு சென்றனர் . முனைவர் மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து, 1988-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது சரியானது என்று தீர்மானித்தார்கள்.

மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ்  நெட்டேர் உணர்ந்தார்கள்.

முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள்,  இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியுருபவர்கள்,  ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினரும் என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான்பால் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தில் நோயாளிகள்,  மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here