நாகாலாந்து
நாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், அயல் நாடான மியன்மார் என்பன இதn எல்லைகளாகக் கொண்டுள்ளன.
இதன் மாநிலத் தலைநகரம் கொஹீமா ஆகும். நாகாலாந்து ஏழு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகும். நாகாலாந்து டிசம்பர் 1, 1963 இல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.









