பாலின மாற்றம் செய்த ஆண், பெண்ணாக இருந்த போது சேகரித்த கருமுட்டைகளை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த முதல் பாலின மாற்றம் செய்த தம்பதிகள் ஹான்னா(32) ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், ஜேக் கிரஃப் 41) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஜேக் பெண்ணாக இருந்தபோது, தன்னுடைய கரு முட்டைகளை சேகரித்து வைத்திருந்துள்ளார். அவற்றை பயன்படுத்தி தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள அத்தம்பதிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த கருமுட்டையை பயன்படுத்தி லோரா என்ற வாடகைத் தாய், மெல்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அத்தம்பதிகளிடம் கொடுத்துள்ளார்.
அதாவது இப்போது தந்தையாக இருப்பவர் தான் தாயாக, தன்னுடைய கருமுட்டைகளைப் பயன்படுத்தி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து தம்பதியரின் குழந்தை ஆசை நிறைவேறிய நிலையில் மீண்டும் இரண்டாவதாகக் குழந்தைபெற முடிவு செய்துள்ளனர். இதனால் மீண்டும் வாடகைத் தாயாக இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க லோரா முன்வந்துள்ளார்.
பிரிட்டனில் இவர்கள் தான் முதல் அபூர்வ தம்பதியர்.
கமெண்ட்: பாலின மாற்றம் மருத்துவம் அல்ல, மக(ள்)த்துவம். தாயும் தந்தையும் வேறல்ல. அவர்கள்தான் வேர்.