பெற்றோரின் சடலடத்துடன் வசித்த பெண்

மேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோரின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தின் பாரநகரில் உள்ள டி.என். சட்டர்ஜி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவர் தனது வயதான பெற்றோருடன் வசித்து வந்தார்.

அந்த பெண்ணின் பெற்றொர் இருவரும் மருத்துவர்கள். அந்த பெண் விவகாரத்து பெற்றவர். அந்த பெண் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வருவதை அண்டை வீட்டார்கள் உணர்ந்தனர்.

இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்களுக்கு இந்த தகவல் சென்றுள்ளது. உடனே அவளது உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸ் குழு அந்த குடியிருப்புக்கு சென்றது.

அந்த வீட்டின் உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டின் படுக்கை அறையில் வயதான  தம்பதியர் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

இதனையடுத்து சிதைந்த நிலையில் இருந்த மருத்துவ தம்பதிகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பெண் பல நாட்கள் தனது பெற்றோரின் சடலத்துடன் வசித்து வந்த தகவல் பக்கத்து வீட்டுகாரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கமெண்ட் : அடுத்த வீட்டில் மூக்கை நுழைக்கக் கூடாது என்பது சரியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here