மத்திய அரசு உள்பட உலகங்கெங்கிலும் பல்வேறு விருதுகளை குவித்து வரும் இப்படத்திற்கு புதுச்சேரி மாநில அரசின் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது, பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்த ‘ஒத்த செருப்பு’-க்கு கிடைத்திருக்கிறது.
புதுச்சேரி அரசின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு சிறந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, அப்படத்திற்கு ஒரு லட்சம் பரிசும் அறிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக ஒத்த செருப்பு சைஸ்-7 தேர்வு பெற்றிருக்கிறது. வரும் 15 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.
இதையடுத்து, அம்மாநில முதல்வருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.





















